Monday, January 28, 2008

"ஸ்ரீநாராயணி பீடம் அன்போடு அழைக்கின்றது"

வேலூர் மாவட்டம் என்றால் அனைவரும் மனதிலும் நினைக்கப்படுவது வேலூர் சிப்பாய் கோட்டையும், மத்திய சிறைச்சாலையும், வி.ஐ.டி, கல்லூரியும் தான் அந்த வரிசையில் இப்போது மக்கள் மனதில் தோன்றுவது பொற்கோவிலும் ஒன்று.

ஆம் உலக மக்களின் பார்வையை இந்த பொற்கோவில் தன் பக்கம் திசை திருப்பி கொண்டு இருக்கிறது என்றால் மிகையாகாது.

"ஸ்ரீபுரம் வருவேற்க்கிறது"

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமலைக்கோடி(தற்போது ஸ்ரீபுரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் ஊரில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளும் ஒன்று சேர்ந்த ரூபமாக ஸ்ரீநாராயணி அருள் பாவிக்கிறாள்.

"ஸ்ரீ சக்தி அம்மா"

இவருடைய உண்மையான பெயர் தெரியவில்லை. ஸ்ரீ சக்தி அம்மா அவர்களால் நூறு ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் 55 ஆயிரம் சதுர அடியில் மிகுந்த கலை நுட்பத்துடன் முழுவதும் தங்கத்தினாலேயே ஒரு பொற்கோவில் படைக்கப்படுள்ளது.

"ஸ்ரீநாராயணி தரிசனம்"

அன்னை ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்திற்குள் செல்ல நட்சத்திர வடிவில் உள்ள பாதையை கடந்து செல்ல வேண்டும். அப்பாதையின் இருபுறங்களிலும் பல வாசக பலகைகளை வைத்துள்ளர்கள்.

நட்சத்திரத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு ஸ்ரீநாராயணி தரிசனம் தருகிறாள்.

பொற்கோவிலை சுற்றியும் இயற்கை சூழ்நிலை தரும் வண்ணமாக ஸ்ரீநாராயணி தரிசனம் அமைக்கப்பட்டுள்ளது.


சிந்தியங்கள் நண்பர்களே.....

who is a good person?
Someone who creates a happiness for others.

வாழ்க வளமுடன்!!!