Monday, October 29, 2007

திரைக்கதை விமர்சனம்


கதை சுருக்கம்:

எழுத்தாளராக வரும் நாயகன் தன்னுடைய கதை படைப்புக்காக தன் நண்பனை ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல கேட்கிறான். அங்கு அம்முவை சந்திக்கிறான்.அந்த இடம் தான் வாழ்க்கை என்று எண்ணி வாழும் அம்முவுக்கு வாழ்க்கையின் மறுப்பக்கத்தை காட்டவும் தன்னுடைய கதை படைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணி அம்முவை மணந்து கொள்கிறான். முடிவில் அவனுடைய படைப்பு வெற்றி பெறுகிறது. யார் அந்த அம்மு? அம்முவின் பிறப்பு மற்றும் வளர்ப்பு எப்படிப்பட்டது? அம்முவாகிய நான் பெயர் வர காரணம் என்ன?. படத்தை பாருங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

"பாடல்கள் பத்திச் சொல்லுங்க"

பழனிபாரதியின் இசையில் இரண்டு பாடல்கள் ஒ.கே.. தொரணம் ஆயிரம் மற்றும் கடலே கடலே என்ற பாடல்கள் கதைக்கு ஏற்றவாரு அமைந்துள்ளது. "நகைச்சுவை பக்கம் வாங்க"
வறண்ட காடு, வெளிச்சம் இல்லாத குடு இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

"பொழச்சுப்போறாங்க கொஞ்சம் பாராட்டலாம்"

நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபனக்கு இப்படம் ஒரு நல்ல படமாக அமையும்.வழக்கமான நக்கலும் கிண்டலும் இல்லாத கதப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.கதனாகியாக வரும் பாரதி அறிமுகம் என்றாலும் ஏதார்த்தமாக நடித்துள்ளார்.

வசனமும் காமிராவும் சில இடங்களில் மின்னுகிறது.

அம்முவாகிய நான் நிஜத்தில் அம்முவாக இருக்க சாத்தியம் இல்லை !.

மதிப்பெண்: ஐந்திற்க்கு மூன்று.

No comments: