Thursday, December 27, 2007

சித்திரம் பேசுதடி - திரைக்கதை ஒரு பார்வை



2006 ஆம் ஆண்டு வெளிவந்து ஒரே ஒரு பாட்டுக்காக மட்டுமே ஒடிய படம் என்றால் அது மிகையாகாதுங்க. இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் ஒளித்து கொண்டுருக்கும் பாடல்,அட என்னாங்க இன்னுமா தெரியல நம்ம 'கானா' உலகநாதன் எழுதி பாடிய பாடல்தான் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும்.
படத்தல ஒன்னும் பெருசாயில்லைங்க, வழக்கமான மசாலா கலந்த கதை, அதற்க்கு மெழுகுட்டும் வண்ணமாக கதாநாயகன் நரேனும் கதாநாயகி பாவனாவும் நடித்துள்ளார்கள்.


கதை: நரேன் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரே வறுமை, பணத்திற்க்காக அடிதடியில் வாழ்க்கையின் பாதை அமைத்து கொள்கிறார். இந்த நிலையில் பாவனாவை சந்திக்கிறார். இருவரும் சந்திக்கும் போதுல்லாம் மோதல் ஏற்படுகிறது. பிறகு இருவரின் ஆசைகளும் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் கதை.

சித்திரம் பேசுதடி பேசபடாத சித்திரம்!!

No comments: